மாவட்ட செய்திகள்

அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர் + "||" + A young man set off on a drive to Ayodhya

அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்

அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்
அயோத்திக்கு ஓட்ட பயணமாக புறப்பட்ட வாலிபர்
ராமேசுவரம்
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நரேந்திரசிங் (வயது 26). கார் மூலம் ராமேசுவரம் வருகை தந்த இவர் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும், உலக நன்மைக்காகவும் ராமேசுவரம் கோவில் வாசல் பகுதியில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணமாக நேற்று புறப்பட்டார். நேற்று காலை கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் இருந்து தனது ஓட்ட பயணத்தை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய வேண்டியும், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணமாக செல்ல முடிவு செய்து இங்கிருந்து புறப்பட்டு உள்ளேன். ஒரு நாளைக்கு 55 கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓட உள்ளேன். ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்டமாநிலங்கள் வழியாக 2,912 கிலோமீட்டர் தூரம் உடைய அயோத்திக்கு செல்ல உள்ளேன். இந்த ஓட்ட பயணத்தை 55 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு கின்னஸ் சாதனை முயற்சியாக செய்ய இருக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை
ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
2. ரூ.4½ லட்சம் மோசடி: உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என மிரட்டிய சென்னை வாலிபர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4½ லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டு, தான் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என கூறி மிரட்டிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மிரட்டல் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. வாலிபருக்கு அரிவாள் வெட்டு
களக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
4. குளத்தில் மீன் பிடிக்க குத்தகை எடுத்ததில் மோதல் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை
திண்டுக்கல்லில், குளத்தில் மீன் பிடிக்க குத்தகை எடுத்ததில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.