மாவட்ட செய்திகள்

நெல்லை வந்தரெயில்கள் தாமதம் + "||" + Nellai came Trains delayed

நெல்லை வந்தரெயில்கள் தாமதம்

நெல்லை வந்தரெயில்கள் தாமதம்
நெல்லை வந்த ரெயில்கள் தாமதம்
நெல்லை:
நெல்லையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு டீசல் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் நேற்று மாலையில் நாங்குநேரி அருகே பழுதாகி நின்றது. இதைத்தொடர்ந்து நெல்லையில் இருந்து ஊழியர்கள் சென்று பழுதை சரி செய்தனர். அதன் பிறகு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
இதனால் நெல்லைக்கு ரெயில்கள் தாமதமாக வந்தன. கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு இரவு 7-15 மணிக்கு வர வேண்டும். ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாக 8-15 மணிக்கு வந்தது. இதேபோல் 7-45 மணிக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக வந்தது. மேலும் கோவை செல்லக்கூடிய ரெயிலும் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.