மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + 84 people infected with corona in Puducherry today

புதுச்சேரியில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

புதுச்சேரியில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 637 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 57 பேர், காரைக்காலில் 18 பேர், மாஹேவில் 7 பேர், ஏனாமில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,26,977 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,846 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,24,494 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 637 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
திருவையாறு, பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அசோக்குமார் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழிதேவனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
2. 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழப்பு; 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 23 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. கேரளாவில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது
4. மெட்ரோ ரெயில் கட்டிட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் 9 பேரும் பாதிக்கப்பட்டனர்.
5. புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.