மாவட்ட செய்திகள்

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் + "||" + Confiscation

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தளவாய்புரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தளவாய்புரம், 
சேத்தூர் அருகே சுந்தரராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவருக்கு சொந்தமான காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள இடையூரணி பகுதியில் உள்ளது. இவரது காட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக சேத்தூர் புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி தலைமையில் போலீசார் குருசாமியின் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் சோதனை நடந்தது. அப்போது அங்கு திருட்டுத்தனமாக 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து குருசாமியை கைதுசெய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
2. சென்னையில் முக கவசம் அணியாத 5,666 பேர் மீது வழக்கு
சென்னையில் முக கவசம் அணியாத 5,666 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
3. லாரியில் கடத்திய 46 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
பரமக்குடி அருகே லாரியில் கடத்திய 46 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான முக்கிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
4. உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ 1 லட்சம் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ 1 லட்சம் பறிமுதல்
5. 125 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
மானாமதுரை அருகே 125 ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.