மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா + "||" + Corona for 451 newcomers in Karnataka

கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 451 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு 29 லட்சத்து 80 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 9 பேர் இறந்த நிலையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 875 ஆக உள்ளது.

  நேற்று 1,455 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 29 லட்சத்து 32 ஆயிரத்து 322 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்து 395 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 187 பேர், மைசூருவில் 48 பேர், ஹாசனில் 43 பேர், உத்தர கன்னடாவில் 37 பேர், தட்சிண கன்னடாவில் 27 பேர் உள்பட 451 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். பெங்களூரு நகரில் 3 பேர், துமகூருவில் 2 பேர், தாவணகெரே, தார்வார், ஹாசன், உத்தர கன்னடாவில் தலா ஒருவர் இறந்தனர். 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
2. ‘கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி’ - சீன அதிபர்
கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
3. கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் மரபணு மாறுபாடு..! கண்டுபிடித்த சுவீடன் விஞ்ஞானிகள்
கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் மரபணு மாறுபாட்டை சுவீடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
4. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 22 பேருக்கு தொற்று; தமிழகத்தில் 23,443 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 22 பேர் உள்பட 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மேலும் 313 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.