மாவட்ட செய்திகள்

வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார் + "||" + The DMK has complained that the DMK has given a golden nose to the voters

வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்

வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி,

புதியதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் காஞ்சீபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட 3 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நேற்று நடைபெற்றது.


இந்த நிலையில் ஒன்றியத்துக்குட்பட்ட கொல்லசேரி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று தங்க மூக்குத்திகளை பரிசாக கொடுப்பதாக வந்த தகவலையடுத்து, அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.

இதையடுத்து அ.தி.மு.க.வினரை பார்த்ததும் தி.மு.க.வினர் அங்கிருந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

மேலும் அங்கு வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் கொடுத்த மூக்குத்திகளை அ.தி.மு.க.வினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக கூறி அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தார். பின்னர் இதுகுறித்து அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் பரிசு பொருட்கள் வழங்காமல் இருக்க அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதம்மாற கட்டாயப்படுத்தியதாக புகார்: தற்கொலை செய்த மாணவி - உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்
தஞ்சை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர்.
2. 105-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி அ.தி.மு.க.வினர் மரியாதை
105-வது பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு வரும் 17-ந்தேதி (திங்கட்கிழமை) அ.தி. மு.க.வினர் மரியாதை செலுத்த இருக்கின்றனர். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
3. தம்பி ராமையா மற்றும் மகன் மீது போலீசில் புகார்
தம்பி ராமையா மற்றும் மகன் நடிகர் உமாபதி மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சரவணன் புகார் மனு அளித்திருக்கிறார்.
4. பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.86 லட்சம் மோசடி செய்த போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
கணவரை பிரிந்து வாழும் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி, ரூ.86 லட்சம் மோசடி செய்த போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
5. 34-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி
34-வது நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வருகிற 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.