மாவட்ட செய்திகள்

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு + "||" + Phase 2 Rural Local Government Election 70% turnout in Chengalpattu district

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவானது, பதற்றமான வாக்குசாவடிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
தாம்பரம்,

புதியதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. முதல் கட்டமாக கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தேர்தலானது, புனித தோமையார் மலை, இலத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களில் நடந்து முடிவடைந்தது. இந்த நிலையில், நேற்று 2-ம் கட்ட தேர்தலானது கட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் மற்றும் சித்தாமூர் ஆகிய 4 ஒன்றியங்களில் நடைபெற்றது.


காலை 7 மணி முதலே வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் ஓட்டு போட்டனர். பதற்றமானவை என அறிவிக்கப்பட்ட காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவிலில் அரசு பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று பார்வையிட்டார்.

970 வாக்குச்சாவடிகள்

அதன் பின்னர், நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்டாங்கொளத்தூர், சித்தாமூர், அச்சரப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த 4 ஒன்றியங்களில் மொத்தம் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

அதில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு செய்ததாக தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 2,315 போலீசார் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 120 நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு முழுவதையும் கண்காணித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: புதிய மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கவுன்சிலர் எண்ணிக்கை நிர்ணயம்
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
2. பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி: மோடி
பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி என்று ஜோ பைடன் நடத்திய மாநாட்டில் மோடி பேசினார்.
3. தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்: காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல்
காஞ்சீபுரம் உள்பட 15 மாவட்டங்களில் முதல்கட்ட அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் வருகிற 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.
5. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட: வேட்புமனு வாங்க வந்த அ.தி.மு.க. தொண்டர் விரட்டியடிப்பு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்க வந்த தொண்டர் விரட்டி அடிக்கப்பட்டார்.