மாவட்ட செய்திகள்

கொலை முயற்சியில் இருந்து வாலிபர் உயிர்தப்பினார் + "||" + arrest

கொலை முயற்சியில் இருந்து வாலிபர் உயிர்தப்பினார்

கொலை முயற்சியில் இருந்து வாலிபர் உயிர்தப்பினார்
கொலை முயற்சியில் இருந்து வாலிபர் உயிர்தப்பினார். அரிவாளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை, 
கொலை முயற்சியில் இருந்து வாலிபர் உயிர்தப்பினார். அரிவாளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடையூறு
தேவகோட்டை சிதம்பரநாதபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் வன்மீகநாதன் (வயது31). அவரது நண்பர் ஆணையடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (35). இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்றனர். 
அப்போது பாதையை அடைத்துக்கொண்டு ஈலோலிவயல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (29) இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். பாதைக்கு இடையூறாக இப்படி வைக்கலாமா என வன்மீகநாதன் கேட்டபோது 2 பேருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது வன்மீக நாதன் தாக்கப்பட்டார். 
பழிக்குப்பழி
இதற்கு பழிக்குப் பழியாக சக்தியை கொலைசெய்ய வன்மீகநாதன் தேவக்கோட்டை வாடியார் வீதியில் உள்ள அரிவாள் விற்கும் கடைக்குச் சென்று அரிவாள் வாங்கினார். அதை அவரது நண்பர் சுரேஷ் முதுகில் தொங்க போட்டு கொண்டு இருவரும் மீண்டும் அந்த மது கடைக்கு சென்றனர். அப்போது அங்கு சக்தி நின்று கொண்டிருந்தார். 
இதற்கிடையில் தமிழக அரசு சமீபத்தில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களை வாங்கினால் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின்படி அரிவாள் வாங்கிய தகவல் நகர் காவல் நிலையத்திற்கு தெரியவந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் ஒரு மணிநேரமாக அந்த 2 வாலிபர்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுரேஷ் முதுகில் தொங்க போட்டுக் கொண்டிருந்த அரிவாளை எடுத்து கொடுக்கும் போது சுரேஷ் முதுகை அந்த அறிவாள் பதம் பார்த்து விட்டது.
கைது
அதை வாங்கி சக்தியை வெட்ட முயலும்போது டவுன் போலீசார் வன்மீகநாதன் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  இதைத் தொடர்ந்து வன்மீகநாதன் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேர் மீதும் (307) கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனர். 
பின்னர் வன்மீகநாதனை தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். முதுகில் காயம் அடைந்த சுரேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தேவகோட் டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு  கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கையால் இந்த கொலை சம்பவம தடுக்கப்பட்டு உள்ளது.