மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் தோல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Leather workers protest

வாணியம்பாடியில் தோல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் தோல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் தோல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி

தோல்பதனிடும் மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் மாவட்ட சங்கம் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாணியம்பாடி கச்சேரிசாலையில் தொழிலாளர்கள் ஆர்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டத்திற்கு நிர்வாகிகள் விமல்குமார், லெனின் தலைமை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் தேவதாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
 
ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திட தமிழக அரசு உடனடியாக  தீர்வு காண வேண்டும் என கோரி கோஷமிட்டனர். நிர்வாகிகள் பாரத்பிரபு, ஜாகிர்உசேன் உள்பட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.