மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் விவசாயி சாவு + "||" + Farmer dies after being struck by thunder near Thirukkalukkunram

திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் விவசாயி சாவு

திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் விவசாயி சாவு
திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் அருகில் நின்ற பலராமனுக்கு அதிர்ச்சியில் மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தனூர் கிராமம் கொல்லை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி பலராமன் (வயது 55). இவர் நேற்று தனது பசு மாட்டை அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

பிற்பகல் 4 மணியளவில் இந்த பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. எனவே மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது பசு மாட்டை வீட்டுக்கு கொண்டுவர அவர் அங்கு சென்றார். அப்போது திடீரென இடி விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

அருகில் நின்ற பலராமனுக்கு அதிர்ச்சியில் மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையறிந்து அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு 108 அவசர ஊர்தி வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருக்கழுக்குன்றம் அருகே மின்கசிவால் 2 குடிசைகள் எரிந்து சாம்பல்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
2. திருக்கழுக்குன்றத்தில் விபத்தில் சிக்கிய சிறுவன் சிகிச்சை பெற உதவிய திருப்போரூர் எம்.எல்.ஏ.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்தமங்கலம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் நரேன் குமார் (வயது 17). நேற்று முன்தினம் இவர் திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.