மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது + "||" + In Kanchipuram district, 31 thousand people were vaccinated on the same day

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலமாக இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 26 ஆயிரம் நபர்களில் முதல் தவணையாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 638 நபர்களும், 2-வது தவணையாக 1 லட்சத்து 77 ஆயிரத்து 430 நபர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 10-ந் தேதி 600 மையங்களில் 48 ஆயிரம் நபர்களுக்கு செலுத்த திட்டமிட்டு மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேலும் முதல் தவணை செலுத்தி கொண்ட நபர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்தி கொள்ள ஏதுவாக அவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார மற்றும் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவ்வகையில் ஒரே நாள் சிறப்பு முகாமில் 31 ஆயிரத்து 8 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்: போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் தெரிவித்தார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நெசவாளர்கள் அவதி; நிவாரணம் வழங்க கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நெசவாளர்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நெசவுத்தொழில் பாதிப்படைந்தது. நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்-நண்பர்கள் வார தொடக்க விழா மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 258 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
தொடர் மழை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
!-- Right4 -->