மாவட்ட செய்திகள்

மும்பை தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை விமான நிலையத்தில் வாலிபர் சிக்கினார் + "||" + Fraud against Mumbai businessman: Person caught at Chennai airport

மும்பை தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை விமான நிலையத்தில் வாலிபர் சிக்கினார்

மும்பை தொழில் அதிபரிடம் மோசடி: சென்னை விமான நிலையத்தில் வாலிபர் சிக்கினார்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சவுதி அரேபியா ஜெட்டாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது வங்க தேசத்தை சோ்ந்த முகமது முஸ்கின் (வயது 28) என்பவா் தொழில் விசாவில் வந்திருந்தாா். அவருடைய பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தபோது, மும்பையை சோ்ந்த தொழில் அதிபரிடம் தொழில் ரீதியாக கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதும், இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது முஸ்கினை கடந்த ஓராண்டாக தேடி வருவதும் தெரியவந்தது. 

முகமது முஸ்கினை விமான நிலையத்துக்கு வந்தால் பிடித்து தரவேண்டும் என மும்பை போலீசார் கோரி இருப்பதும் தெரிந்தது.இந்தநிலையில் முகமது முஸ்கின், சொந்த ஊருக்கு செல்லாமல் சவுதி அரேபியா சென்று விட்டு தற்போது தொழில் விவகாரமாக இந்தியா வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்த சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், இது பற்றி மும்பை போலீசாருக்கு தகவல் அளித்தனர். மும்பை போலீசார் சென்னை வந்து முகமது முஸ்கினை கைது செய்து அழைத்துச்செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.