மாவட்ட செய்திகள்

தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + former aggitation aganist seeman

தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 100 நாள் வேலை திட்டத்தையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரி நன்றி கூறினார்.