மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் பலி + "||" + motor cycle accident one person death

மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதல் ஒருவர் பலி
வெள்ளகோவில்
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி வயது 57. இவர் கடந்த வாரம் 7-ந் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசில் உள்ள மில்லில் வேலை கேட்பதற்காக வந்தார்.  அப்போது கரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் தெய்வசிகாமணி மீது மோதியது. இந்த விபத்தில் தெய்வசிகாமணிக்கும், மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வேடசந்தூர் பகுதியை சேர்ந்த விஜய்  என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே  அருகில் உள்ளவர்கள் தெய்வசிகாமணியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி  சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தெய்வசிகாமணி இறந்து விட்டார். விஜய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.