மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட 120 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு + "||" + Prosecution of 120 farmers involved in road blockade

சாலை மறியலில் ஈடுபட்ட 120 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

சாலை மறியலில் ஈடுபட்ட 120 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு
சாலை மறியலில் ஈடுபட்ட 120 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள குரும்பி வயலில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி நேற்று முன்தினம் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 2 வாலிபர்கள் தீக்குளிக்க முயன்றனர். 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் உதவி கலெக்டர் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் தனவேந்தன், விவசாயிகள் அழகர், அடைக்கலம், முருகானந்தம், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற செல்லப்பசாமி, சந்தோஷ்குமார் மற்றும் 40 பெண்கள் உள்பட 120 பேர் மீது கறம்பக்குடி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.