மாவட்ட செய்திகள்

ஊராட்சி முன்னாள் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு + "||" + 3 cros income loss ii government due to fir register an ex president kavundachiputhur panchayat

ஊராட்சி முன்னாள் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

ஊராட்சி முன்னாள் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
அரசுக்கு ரூ.3¼ கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடர்பாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசுக்கு ரூ.3¼ கோடி இழப்பு ஏற்படுத்தியதாக  தொடர்பாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது
ரூ.3¼ கோடி இழப்பு
திருப்பூர் மாவட்டம் கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் வயது 45. இவர் தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஊராட்சி தலைவராக இருந்தார். 
அப்போது 26 இடங்களில் வீட்டுமனை அமைத்து விற்க, அங்கீகரிக்கப்படாத மனையிடங்களுக்கு விதிமுறைகளை மீறி தடையின்மைசான்று வழங்கியதாக புகார் எழுந்தது. இதில் ரூ.3 கோடியே 28 லட்சத்து 71 ஆயிரத்து 535 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து முன்னாள் ஊராட்சி தலைவர் உதயகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.