மாவட்ட செய்திகள்

திட்டக்குடி அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் வ.கவுதமன் மனு + "||" + Gauthaman petition to Minister Meyyanathan

திட்டக்குடி அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் வ.கவுதமன் மனு

திட்டக்குடி அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் வ.கவுதமன் மனு
மனு
சென்னை, 
தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான வ.கவுதமன் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிய ஏதுவாக, பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் எழுப்பவும், உள்விளையாட்டு அரங்கம், ஓடுகளம், நடைபயிற்சி பாதை அமைக்கவேண்டும். மேலும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் அனைத்து விளையாட்டுகளை விளையாட தேவையான உபகரணங்களை வழங்கவேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.