மாவட்ட செய்திகள்

ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவிவசாயியை துரத்திய ஒற்றை யானை + "||" + Elephant

ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவிவசாயியை துரத்திய ஒற்றை யானை

ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவிவசாயியை துரத்திய ஒற்றை யானை
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற விவசாயியை ஒற்றை யானை துரத்தியது.
தாளவாடி
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற விவசாயியை ஒற்றை யானை துரத்தியது. 
விவசாயி
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம்.  இந்தநிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் நோக்கி விவசாயி நாகராஜ் என்பவர் வனப்பாதையில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு ஆண் யானை ரோட்டுக்கு வந்தது. எதிர்திசையில் யானை நிற்பதை பார்த்ததும் நாகராஜ் மோட்டார்சைக்கிளை   நிறுத்தினார். 
துரத்தியது
அப்போது யானை ஆவேசத்துடன் நாகராஜை நோக்கி ஓடிவந்தது. உடனே மோட்டார்சைக்கிளை இயக்க முடியாததால், வண்டியை ரோட்டிலேயே போட்டுவிட்டு நாகராஜ் வந்த வழியே திரும்பி ஓடினார். யானையும் விடாமல் துரத்தியது. 
அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தச்சொல்லி அதில் ஏறி நாகராஜ் உயிர் தப்பினார். சுமார் 15 நிமிடங்கள் ரோட்டிலேயே நடமாடிய யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

1. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் நாசம் ஆனது.
2. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் : கேரளாவில் யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பு
நவம்பர் 2018 ஆம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் கேரளாவில் 519 யானைகள் இருந்துள்ளன .தற்போது அந்த எண்ணிக்கை 453 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இரும்பு வேலியை சாதாரணமாக தாண்டி சென்ற யானை-வீடியோ
பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்கா அருகே யானை ஒன்று, இரும்பு வேலியை தாண்டி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
4. வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை
ராஜபாளையம் வன பகுதியில் யானை இறந்து கிடந்தது.
5. ஆசனூர் அருகே அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை; கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது
ஆசனூர் அருகே அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த யானை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது.