மாவட்ட செய்திகள்

தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி + "||" + bhavar retaliates against fadnavis

தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி

தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி
இன்னும் முதல்-மந்திரியாக உணர்வதாக கூறிய தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார். 4 தடவை முதல்-மந்திரி பதவி வகித்த நான் அப்படி உணரவில்லை என்றார்.
மும்பை, அக்.

இன்னும் முதல்-மந்திரியாக உணர்வதாக கூறிய தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார். 4 தடவை முதல்-மந்திரி பதவி வகித்த நான் அப்படி உணரவில்லை என்றார். 

முதல்-மந்திரி பதவி 

மராட்டிய சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உயர்ந்த பா.ஜனதா, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகி 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. இருப்பினும் முதல்-மந்திரி பதவி போட்டியாமல் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவுடான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டது. 

சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைத்து ஆட்சியை கைப்பற்றியது. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரியாகும் வாய்ப்பை இழந்தார். 

இந்த நிலையில் நவிமும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வந்தாலும் தான் இன்னும் முதல்-மந்திரியாக தான் உணர்வதாக கூறினார். 

சரத்பவார் பதிலடி

இந்த நிலையில் அவரது பேச்சுக்கு தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இன்னும் தன்னை முதல்-மந்திரியாக கருதுவது நல்லது தான். அவரை வாழ்த்துகிறேன். 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்து ஆட்சி முடிந்த பிறகும் பட்னாவிஸ் அந்த பதவியை வகிப்பதாக உணர்கிறார். எனக்கு அந்த குணம் இல்லை. நான் 4 முறை மராட்டிய முதல்-மந்திரியாக பணியாற்றியுள்ளேன். ஆனால் எனக்கு இது நினைவில் இல்லை” என்றார்.