மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் + "||" + Supportive Muslim women in Chengalpattu district can join the Women's Aid Society

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் கலெக்டர் தகவல்.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு இச்சங்கம் புதுப்பிக்கப்படவுள்ளதால், சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர் செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய சந்தா தொகையினை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

சங்கத்தின் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறுதொழில் புரியவும், மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல், சுயதொழில் செய்ய பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவி பெற விரும்புவோர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி மனு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
2. தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை
தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்.
3. சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் அமைச்சர் தகவல்
சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு தகவல்
குழந்தைகள் நல மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தமிழக அரசு தகவல்.
5. தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் வெகுமதி
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.