மாவட்ட செய்திகள்

கரடிக்கு அடிபணிந்த புலி + "||" + Tiger submissive to bear

கரடிக்கு அடிபணிந்த புலி

கரடிக்கு அடிபணிந்த புலி
பந்திப்பூர் வனப்பகுதியில் கரடியை பார்த்ததும் புலி அடிபணிந்த சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளேகால்:

  சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வினோத சம்பவத்தை பார்த்து கண்டு ரசித்தனர். அதாவது பந்திப்பூர் வனப்பகுதியில் புலி நடமாடி கொண்டிருந்தது. அப்போது புலி எதிரே கரடி ஒன்று வந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் கரடியை, புலி அடித்து கொல்லும் என்று எதிர்பார்த்தனர்.

  ஆனால் மாறாக, புலியை பார்த்ததும் அந்த கரடி, தான் சண்டைக்கு தயார் என்று கூறுவது போல எழுந்து நின்றது. இதனை பார்த்த புலி, கரடியை பார்த்து அடிபணிந்து கீழே படுத்துக்கொண்டு வாலாட்டியது. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதனை தங்கள் கேமரா மற்றும் செல்போன்களில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது- உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை
புலிகள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்ததால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது கிடைத்து உள்ளது. உலக அளவில் முதல் இடம் பிடித்ததால் இந்த விருது வழங்கப்படுகிறது.
2. ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கரடி: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கரடி: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்.
3. தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாட்டம்
தாளவாடி அருகே தோட்டத்தில் மீண்டும் புலி நடமாடியது.
4. தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.
5. புலிகள் கணக்கெடுப்பு முகாம்
தேவதானம் அருகே புலிகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெற்றது.