மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது + "||" + Factional conflict over land; 2 people arrested

நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது

நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
பாணாவரம் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பழையபாளையம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 39). இவரது மனைவி வள்ளி. இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லிமுத்து-அஞ்சலா தம்பதியர். இவர்களது மகன்கள் சந்தோஷ் (19), சிவலிங்கம்.

இந்த நிலையில் சந்தோஷ் தரப்பினர் தாங்கள் புதிதாக வாங்கிய நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த பக்கத்து நிலத்துக்காரரான வேலாயுதம், நிலத்தை அளவீடு செய்யாமல் ஏன் சீரமைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இரும்புக் கம்பி, கட்டையால் சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிகிறது. 

இது குறித்து இரு தரப்பினரும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பைச் சேர்ந்த சந்தோஷ், வேலாயுதம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
பரமக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கடையநல்லூரில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
நெல்லையில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கஞ்சா கடத்திய 2 பேர் கைது
திருக்குறுங்குடி அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.