மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனம் மரத்தில் மோதி 2 பேர் சாவு + "||" + Death

சரக்கு வாகனம் மரத்தில் மோதி 2 பேர் சாவு

சரக்கு வாகனம் மரத்தில் மோதி 2 பேர் சாவு
காளையார்கோவில் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காளையார்கோவில்,
 
காளையார்கோவில் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மரத்தில் மோதியது

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா பில்லூரை சேர்ந்தவர் சின்ன அழகுமலை(வயது 60). இவர் ஒரு சரக்கு வாகனத்தில் நாகப்பட்டினம் சென்று ஈச்சமர மட்டைகளை வெட்டி ஏற்றி கொண்டு திருமங்கலம் விரைந்து கொண்டிருந்தார். அந்த சரக்கு வாகனத்தை தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா கீழையம்பட்டியை ேசர்ந்த டிரைவர் மணிகண்டன்(35) ஓட்டி வந்தார். சரக்கு வாகனத்தில் சின்னஅழகுமலையின் மகன் கண்ணன், உறவினர்கள் அலெக்சாண்டர், செல்வம் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் நேற்று மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பெரிய நரிக்கோட்டை கிராமம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் ரோட்ேடாரத்தில் நின்றிருந்த புளியமரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

2 பேர் பலி

இந்த விபத்தில் சின்ன அழகுமலை, சரக்கு வாகன டிரைவர் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த அலெக்சாண்டர், செல்வம், கண்ணன் ஆகியோரை காளையார்கோவில் போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்டு  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 3 பேர் படுகாயம்
ஏழாயிரம்பண்ணை அருகே மராமத்து பணியின் போது வீடு இடிந்து விழுந்து ெதாழிலாளி பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
3. கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இறந்தார்.
4. மாணவன் மர்மச்சாவு
மாணவன் மர்மச்சாவு
5. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஆட்டோ டிரைவர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.