மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Teen commits suicide by hanging

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கருங்கல் அருகே காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் கைதவிளாகத்தை சேர்ந்தவர் ஜான் கிளைமன்ட். இவருடைய மகள் அபிஷா (வயது 21). பிளஸ்-2 வரை படித்துவிட்டு குளச்சலில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். 
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அபிஷா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த சில மாதங்களாக அபிஷா அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். 
பெற்றோர் கண்டித்தனர்
இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த வாலிபரும் அபிஷாவும் குளச்சலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அபிஷாவின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால், அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற அபிஷா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை தட்டி அவரை அழைத்தனர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. மேலும், அறையின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. 
தூக்கில் தொங்கினார்
தொடர்ந்து குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அபிஷா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அபிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார், அபிஷாவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அருமனை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அருமனை அருகே காதல் திருமணம் செய்த 8-வது மாதத்தில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
3. திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
4. பாகலூர் அருகே தோழி ஊருக்கு சென்றதால் வேதனை இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தோழி ஊருக்கு சென்றதால் வேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
5. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் 2 இளம்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.