மாவட்ட செய்திகள்

கோவில் வாசலில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + The child who was recovered from the temple gate was admitted to the hospital

கோவில் வாசலில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவில் வாசலில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி
மொண்ணவேடு கிராமத்தில் கோவில் வாசலில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மொண்ணவேடு கிராமத்தில் கங்கைஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதாக வெங்கல் போலீசாருக்கு நேற்று முந்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கோவில் வாசலில் அழுது கொண்டிருந்த அந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் அந்த குழந்தை ஒப்படைக்கப்படும்.

பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை கோவில் வாசலில் வீசிவிட்டு சென்றது யார்? எதனால் இப்படி செய்தனர்?.அல்லது யாராவது குழந்தையை கடத்தி வரும்போது கோவில் வாசலில் வீசிவிட்டு சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.