மாவட்ட செய்திகள்

மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்; வாலிபர் மீது வழக்கு + "||" + Confiscation of moped smuggled in sandbags; The case against Valipar

மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்; வாலிபர் மீது வழக்கு

மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல்; வாலிபர் மீது வழக்கு
மணல் மூட்டைகள் கடத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டு, வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அதிகாரி அய்யப்பன் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தா.பழூர்- இடங்கண்ணி சாலையில் மொபட்டில் 3 மூட்டைகளுடன் வந்தவரை நிறுத்தி விசாரித்தார். அப்போது அந்த நபர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மூட்டைகளில் பார்த்தபோது மணல் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மொபட்டில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தது தாதம்பேட்டைைய சேர்ந்த மருதகாசியின் மகன் பிரபாகரன்(வயது 30) என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம்: ஊரடங்கில் விதிமீறிய 598 பேர் மீது வழக்கு
காஞ்சீபுரத்தில் முழு ஊரடங்கில் விதிமீறிய 598 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. முதியோர் உதவி எண்ணுக்கு வந்த 17 புகார்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் நடவடிக்கை
முதியோர் உதவி எண்ணுக்கு வந்த 17 புகார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்கு
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.