மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு + "||" + Corona Vaccine

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு
ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
தடுப்பூசி முகாம் 
ராஜபாளையம் நகராட்சி சுகாதாரத்துறை, வருவாய் துறையுடன் இணைந்து சம்மந்தபுரம் 8-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் ஆகியோரின் அறிவுரைப்படி மாவட்டத்தில் முதன்முறையாக 100 சதவீத தடுப்பூசி போட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பரிசு 
 ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகர் நல அலுவலர் சரோஜா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரியங்காவு வரவேற்றார். 8-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயசெல்வி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைகர் சம்சுதீன் குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். துப்புரவு ஆய்வாளர்கள் பழனிகுருகாளி, சுதாகரன், பிரபாகரன், பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி...!
மூக்கு வழியாக செலுத்தும் வகையிலான கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
2. இதுவரை, 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது
3. 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி வட்டாரத்தில் 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4. 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.
5. ஆஸ்திரியா: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க லாட்டரி பரிசு அறிவிப்பு..!
ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.