மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு + "||" + Case

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்முதல் இடம் பிடித்த காளைக்கு பரிசாக கார் வழங்கக்கோரி வழக்கில்கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை, 

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில், எனது காளை 3-வது பரிசு பெற்றது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை பங்கேற்றது. அதிக புள்ளிகளைப் பெற்ற எனது காளைக்கு முதல்  பரிசாக காரும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அந்த பரிசு வழங்கப்படவில்லை. எனவே அந்த பரிசுகளை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் பாண்டியராஜ் ஆஜராகி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அதில் அறிவிக்கப்பட்ட பரிசை உரிய காளைக்கு அளிக்காதது ஏற்புடையதல்ல, என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து, மனுதாரரின் காளை முதல் பரிசு பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவரது கோரிக்கை உண்மை எனில் பரிசை 2 வாரத்தில் வழங்க மதுரை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கு-வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வழக்கில் பதில் அளிக்க வருவாய்த்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3. நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமையாக பாட கோரிய வழக்கு தள்ளுபடி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து முழு பாடலையும் பாடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
5. அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு