மாவட்ட செய்திகள்

சாம்ராஜ்நகரில் ஓடும் பசுமை ஆட்டோ + "||" + solar auto functioned in chamarajanagar

சாம்ராஜ்நகரில் ஓடும் பசுமை ஆட்டோ

சாம்ராஜ்நகரில் ஓடும் பசுமை ஆட்டோ
பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சாம்ராஜ்நகரில் ஒரு டிரைவர் பசுமை ஆட்டோவை ஓட்டி வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கொள்ளேகால்: பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சாம்ராஜ்நகரில் ஒரு டிரைவர் பசுமை ஆட்டோவை ஓட்டி வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

 பசுமை ஆட்டோ

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இதனால் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சிலர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சைக்கிளுக்கு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு டிரைவர், பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோவை ஓட்டி வருகிறார். சாம்ராஜ்நகர் டவுனை சேர்ந்தவர் ஜோசப் ஆலிவர். டிரைவரான இவர் தான், பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோவை ஓட்டி வருகிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:-

நான்(ஜோசப் ஆலிவர்) வெளியூரில் டிரைவராக வேலைபார்த்தேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். கடை அல்லது வேறு தொழில் செய்ய நினைத்தேன். ஆனால் அதில் முதலீடு செய்யும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. இந்த நிலையில் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தேன். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஆட்டோ  ஓட்டி சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பசுமை ஆட்டோ தயாரித்து விற்பதை அறிந்தேன். அதன்படி ரூ.2.10 லட்சத்துக்கு அந்த ஆட்டோவை வாங்கி ஓட்டி வருகிறேன். பெட்ரோல் செலவு மிச்சம். இதனால் அதிக லாபம் கிடைக்கிறது.

4 மணி நேரம் சார்ஜ் செய்தால்...

 இந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டு இருப்பது 48 வோல்ட் லித்தியம் பேட்டரி ஆகும். 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவை ஓட்டலாம். கூடுதலாக சோலாரும் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் உள்ளது. இந்த ஆட்டோ மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆஸ்பத்திரிகளுக்கு செல்வோர் விரும்பி வந்து பயணம் செய்கின்றனர். எதிர்காலத்தில் இந்தவகை ஆட்டோக்கள் சாலைகளில் அதிகளவில் ஓடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஓடும் முதல் பசுமை ஆட்டோ ஜோசன் ஆலிவருடையது என்பது குறிப்பிடத்தக்கது. பசுமை ஆட்டோவை ஓட்டும் ஜோசன் ஆலிவருக்கு பாராட்டுகள் குவிகிறது.