மாவட்ட செய்திகள்

புவனகிரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி + "||" + Worker killed by electric shock

புவனகிரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

புவனகிரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
போலீசார் விசாரணை
புவனகிரி, 

புவனகிரி அருகே மேல்குறியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மருத பிள்ளை (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று காலை சேதமடைந்த வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வீட்டின் மேற்கூரை இரும்பு தகரத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதையறியாத மருதபிள்ளை மேற்கூரையை அப்புறப்படுத்தியபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காரைக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
2. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
3. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.
4. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.