மாவட்ட செய்திகள்

தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை + "||" + suicide

தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை

தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை
தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துெகாண்டார்.
காரைக்குடி, 
காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர் பல்கலைக்கழக பகுதியில் கேன்டீன் நடத்தி வருகிறார். வீட்டருகே மளிகை கடை நடத்தி வருகிறார். அதனை அவரது மனைவி கவனித்து வருகிறார். இவர்களது மகள் தேன்மொழி (வயது 16) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சமீபத்தில் நடந்த கணக்கு தேர்வில் தேன்மொழி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதனால் அவரது தந்தை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார். இதனால் தேன்மொழி மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேன்மொழியின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
மதுரை கே.புதூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
பெண் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. விஷம் குடித்து தற்கொலை: மாணவி சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர், இன்று போலீசில் ஆஜராக வேண்டும்
பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. ஆய்வக உதவியாளர் தற்கொலை
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
5. வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை