மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி + "||" + Corona

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
அரியலூர், 
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூா் மாவட்டத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 41 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 68 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 432 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 463 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொற்று பரவலின் எண்ணிக்கையை பொறுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு; ஒரே நாளில் 1,066 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 1,066 பேருக்கு கொரோனா உறுதியானது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 509 ஆக உயர்ந்தது.
3. 529 பேருக்கு கொரோனா
529 பேருக்கு கொரோனா
4. இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு; பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது
புதுக்கோட்டையில் 244 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது.