மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கணவர் மீது வழக்குப் பதிவு + "||" + Loving wife locked up at home and tortured

காதல் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கணவர் மீது வழக்குப் பதிவு

காதல் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கணவர் மீது வழக்குப் பதிவு
காதல் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது
மலைக்கோட்டை
திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜேஷ் (வயது 40). இவரது மனைவி கலையரசி (வயது 39). இவர்கள் இருவரும்
கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி யாருடனோ தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ராஜேஷ், அவரை வீட்டில் பூட்டி வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கலையரசி அளித்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி, ஜஸ்டின் ராஜேஷ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.