மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கம் + "||" + Weerawansa to detonate 60 bombs to policemen killed during the operation

பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கம்

பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கம்
தஞ்சையில் பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கலெக்டர், டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கலெக்டர், டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீர வணக்க நாள்
வீர, தீர செயல்களில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்த போலீசாரின் நினைவைப்போற்றும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந்தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வீரவணக்க நாளையொட்டி வீரமரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
60 துப்பாக்கி குண்டுகள்
அப்போது 3 ரவுண்டு என 60 துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அதைத்தொடர்ந்து வீரமரணம் அடைந்த போலீசாரின் சாதனைகளை நினைவு கூறியதோடு, வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.இதில் தஞ்சை நகர துணை போலீஸ்சூப்பிரண்டு கபிலன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஆயுதப்படை போலீசார் உள்பட பலர்கலந்து கொண்டனர்.