மாவட்ட செய்திகள்

வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி + "||" + Fraud

வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி

வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி
மதுரையில் வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,

மதுரை ஆர்.எம்.எஸ். ரோட்டில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக இருப்பவர் பிரவீன்குமார். இவர் திலகர் திடல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகர் 4-வது தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவர் நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் பெற்றார். இந்தநிலையில், அவர் வைத்த அந்த நகைகளை மதிப்பீடு செய்து பார்த்த போது, அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. எனவே கவரிங் நகையை பயன்படுத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பரசுராமன் மீது திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி; தனியார் நிறுவன மேலாளர் மீது வழக்கு
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கூரியரில் ஐபோன் அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி
இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபரிடம் நட்பாக பழகி கூரியரில் ஐபோன் அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சத்தை மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி
பண்ருட்டி அருகே நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. திருக்கோவிலூர் அருகே பரபரப்பு இறந்து போனவர்களின் பெயர்களை சேர்த்து ஊரக வேலை திட்டத்தில் மோசடி
திருக்கோவிலூர் அருகே ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இறந்து போனவர்களின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்து மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்