மாவட்ட செய்திகள்

பண்ணை வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை + "||" + cheetah entered in farm house and try to hunt the dog

பண்ணை வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை

பண்ணை வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை
அஜ்ஜாம்புராவில் பண்ணை வீட்டுக்குள் புகுந்து நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றது. அந்த சிறுத்தையை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
சிக்கமகளூரு: அஜ்ஜாம்புராவில் பண்ணை வீட்டுக்குள் புகுந்து நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றது. அந்த சிறுத்தையை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

பண்ணை வீட்டுக்குள்...

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகாவில் சீரனஹள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து மாடு, தெருநாய்களை அடித்து கொன்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரைதேடி சீரனஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் சிறுத்தை, அதேகிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சுநாத் என்பவரின் பண்ணை வீட்டிற்குள் புகுந்தது. அங்கு சிறுத்தை, வீட்டின் சமையல் அறையின் அருகே கட்டிப்போட்டிருந்த மஞ்சுநாத்தின் வளர்ப்பு நாயை கொன்று இரையாக்க முயன்றது.

சிறுத்தை விரட்டியடிப்பு

அப்போது சிறுத்தையை பார்த்ததும் நாய் குரைத்தது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மஞ்சுநாத், அவரது சகோதரர் வந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுத்தை, நாயை இரையாக்க அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதையறிந்த கிராம மக்கள், உருட்டு கட்டையுடன் வந்து சிறுத்தையை விரட்டினர். 

இதனால் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதையடுத்து சீரனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.