மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை + "||" + Widespread rains in Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் கடும் வெயில் மக்களை வாட்டியது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது வானில் மேகங்கள் திரண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதன்படி அதிகாலை நேரங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலையிலும் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்து உள்ளது. தூத்துக்குடியிலும் நேற்று பரவலான மழை பெய்தது.
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 1 மில்லி மீட்டரும், காடல்குடியில் 7 மில்லி மீட்டரும், வைப்பாரில் 3 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 43 மில்லி மீட்டரும், கயத்தாறில் 17 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் ஒரு மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 6.4 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 11.1 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.