மாவட்ட செய்திகள்

2 பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு; வீடுகளில் நகை- பணம் திருட்டு + "||" + 9 pound flush with 2 women; Home jewelry- money theft

2 பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு; வீடுகளில் நகை- பணம் திருட்டு

2 பெண்களிடம் 9 பவுன் நகை பறிப்பு; வீடுகளில் நகை- பணம் திருட்டு
குன்னம் அருகே ஒரே நாள் இரவில் 2 பெண்களிடம் 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்தனர். மேலும் 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.
குன்னம்:

நகைகள் பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா. இவரது மனைவி மங்கையர்க்கரசி(வயது 27). இவரும், அதே ஊரை சேர்ந்த அன்புச்செல்வனின் மகள் அன்புச்செல்வியும்(17) நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த 4 பேர், 2 பேரையும் தாக்கி மங்கையர்க்கரசி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் ஒரு பவுன் தோடு ஆகியவற்றையும், அன்புச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் சங்கிலி என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
நகை- பணம் திருட்டு
மேலும் அதே ஊரில் உள்ள தமிழரசி என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை நள்ளிரவில் திறந்த மர்ம நபர்கள், வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரத்தையும், அந்த வீட்டை அடுத்துள்ள சுமதி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பெட்டிக்குள் இருந்த ரூ.6,500-ஐயும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள ராணி என்பவரின் வீட்டு கதவை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ேமலும் இந்த தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெகதாப்பட்டினம் அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஜெகதாப்பட்டினம் அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. கோபியில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபியில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது
உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
4. ஈரோட்டில் துணிகரம்: ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை திருடிச்சென்ற வாலிபர்
ஈரோட்டில் ரெயில்வே அதிகாரி போல் நடித்து ஆட்டோவை துணிகரமாக திருடிச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.