மாவட்ட செய்திகள்

ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும்-சகன் புஜ்பால் கிண்டல் + "||" + The drug turns into powdered sugar-Sakan Bhujbal teased

ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும்-சகன் புஜ்பால் கிண்டல்

ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும்-சகன் புஜ்பால் கிண்டல்
ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும் என சகன் புஜ்பால் கூறியுள்ளார்.
மும்பை, அக்.

ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள், சர்க்கரை பொடியாக மாறிவிடும் என சகன் புஜ்பால் கூறியுள்ளார்.

சர்க்கரையாக மாறும்
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சமீபத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மும்பை-கோவா சொகுசு கப்பலில் ஆர்யன் கானுடன் இருந்தவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஆர்தா்ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் நடிகர் ஷாருக்கான் தற்போது பா.ஜனதாவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரை பொடியாக மாறிவிடும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் கூறியுள்ளார்.

முந்த்ரா துறைமுகம்
இது குறித்து அவர் பீட் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசும் போது கூறியதாவது:-

‘‘குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து விசாரணை நடத்தாமல் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஷாருக்கானை சுற்றி வருகின்றனர். ஒருவேளை ஷாருக்கான் பா.ஜனதாவில் இணைந்தால், போதைப்பொருள் சர்க்கரை பொடியாக மாறிவிடும்.

 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு தீர்மானம் கொண்டு வருகிறது.

 அதை எதிர்த்து பா.ஜனதா நிர்வாகி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். பா.ஜனதா பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடுக்கு எதிராக உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. போட்டோவுக்கு போஸ் கொடுத்த தந்தை ; தலையில் அடித்து கொண்ட ஆர்யன் கான் நண்பர்
போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் இருக்கும் அர்பாஸ் மெர்ச்சன்ட் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் வேகமாகச் சென்று காரில் ஏறிக்கொண்டார்.
2. போதைப்பொருள் வழக்கில் பணியிட மாற்றம்; சமீர் வான்கடே மறுப்பு
ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் நீக்கப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமீர் வான்கடே மறுத்து உள்ளார்.
3. தொடர்ச்சியான புகார்: மத்திய மந்திரியை சந்தித்த வான்கடே மனைவி
மராட்டிய ,மந்திரி நவாப் மாலிக்கின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் சமீரை எந்த நேரமும் மும்பை போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
4. சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது: மத்திய சமூக நீதி அமைச்சகம்
சொந்த உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது.
5. போதைப்பொருள் வழக்கில் எனது வாட்ஸ்-அப் உரையாடல் தவறாக சித்தரிப்பு: ஆர்யன் கான்
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார்.