மாவட்ட செய்திகள்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை + "||" + election

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட குழு கூட்டம் ஓசூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும். இந்த தலைவர்கள் மக்களால் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க பட வேண்டும். இதை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள், தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வருகிற 30-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சைக்கிள் பேரணி நடத்தப்படவுள்ளது என்றார்.  பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் லகுமய்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு வைராபாளையத்தில் அடர்வனம் அமைக்கும் பணி; மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்
ஈரோடு வைராபாளையத்தில் அடர்வனம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.
2. ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு: விரைவில் பாலித்தீன் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை- மாநகராட்சி அதிகாரி தகவல்
ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக விரைவில் பாலித்தீன் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
3. எங்கள் வார்டு பிரச்சினைகளை கேட்பது இல்லை: மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு- மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை
ஈரோடு மாநகராட்சியின் வார்டுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினால் மதிப்பது இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர்.
4. ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
5. சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9-ந் தேதி தாக்கல்
6 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை மாநகராட்சியின் ‘பட்ஜெட்’ மாமன்றத்தில் வரும் 9-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.