மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, தென்காசியில்ரூ.15½ கோடிக்கு மது விற்பனை + "||" + Nellai, in Tenkasi Liquor sales for Rs 150 crore

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, தென்காசியில்ரூ.15½ கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை, தென்காசியில்ரூ.15½ கோடிக்கு மது விற்பனை
நெல்லை, தென்காசியில் ரூ.15½ கோடிக்கு மது விற்பனை
நெல்லை:
தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களாக நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவில் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 98 கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 கடைகளும் என மொத்தம் 167 மதுக்கடைகள் உள்ளன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களிலும் மொத்தம் ரூ.15 கோடியே 51 லட்சத்துக்கு மது விற்பனை ஆனது.இதில் நெல்லை மாவட்டத்தில் தீபாவளி அன்று ரூ.4.05 கோடியும், அதற்குற்கு முந்தைய நாளில் ரூ.3.68 கோடியும் என மொத்தம் ரூ.7 கோடியே 73 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் தீபாவளி அன்று ரூ.4.28 கோடிக்கும், முந்தைய நாளில் ரூ.3.50 கோடிக்கும் என மொத்தம் ரூ.7 கோடியே 78 லட்சத்துக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒருவர் பலி
நெல்லை கல்குவாரி பாறைகளுக்கு இடையே சிக்கிய மேலும் ஒருவர் பலியானார்.
2. நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
3. நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்கபட்ட தொழிலாளி உயிரிழப்பு...!
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கபட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
4. நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5. நெல்லை: தொடர்ந்து பாறைகள் சரிவதால், கல்குவாரியில் மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம்!
நெல்லை கல்குவாரி மீட்பு பணியின்போது மீண்டும் ஒரு ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.