மாவட்ட செய்திகள்

அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு + "||" + lvb vaikkal

அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு

அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு
அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டது.
அறச்சலூர்-சென்னிமலை இடையே கீழ்பவானி வாய்க்கால் மதகில் நீர் கசிவு ஏற்பட்டது. 
நீர் கசிவு
கீழ்பவானி பிரதான வாய்க்கால் அறச்சலூரில் இருந்து 2-ஆக பிரிகிறது. அதில் ஒரு பிரிவு சென்னசமுத்திரம் பகுதியையும், மற்றொரு பிரிவு சென்னிமலை வழியாக சென்று திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மங்களப்பட்டியை அடைகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அறச்சலூர் - சென்னிமலை இடையே ஊதங்காட்டுப்புதூர் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் தலைப்பு மதகு பகுதியில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சீரமைப்பு
தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் (சென்னிமலை), சபரிநாதன் (காங்கேயம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீர் கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். 
பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி  சீரமைத்தனர். பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டதால் உடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 
உரிய நடவடிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் குறைந்த அளவில் தான் தண்ணீர் செல்கிறது. இதனால் வாய்க்கால் மதகில் ஏற்பட்ட உடைப்பு தவிர்க்கப்பட்டது. ஒருவேளை வாய்க்காலில் தண்ணீர் நிறைய செல்லும்போது உடைப்பு ஏற்பட்டு இருந்தால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள், வயல்வெளிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி இருக்கும். கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி பல இடங்களில் நடவு பணி நடைபெற்று வருகிறது அந்த பணியும் பாதிக்கப்பட்டு இருக்கும். 
கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்கனவே நல்லாம்பட்டி, உக்கரம், கூடத்துறை, வெள்ளிவலசு ஆகிய இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே இனிமேல் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்படாமல் கரைைய பலப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவேண்டும்,’ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு எது பயன் தரும் என்பதை பார்க்காமல் கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் பிரச்சினை திசை மாறுகிறது- புதிய சங்கம் தொடக்கம்
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் போடும் பிரச்சினையில் போராட புதிதாக ஒரு சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் விவசாயிகளுக்கு எது நன்மை தரும் என்பதை பார்க்காமல் பிரச்சினையை திசைமாறி பயணிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
2. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விவசாய சங்கங்களின் ஆதரவும் -எதிர்ப்பும்
கீழ்பவானி வாய்க்காலில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக விவசாய சங்கங்களின் ஒரு தரப்பு ஆதரவும் இன்னொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
3. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
4. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.