மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனர் + "||" + The public should avoid going through the tunnels: Corporation Commissioner

பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனர்

பொதுமக்கள் சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனர்
சென்னையில் மழையின் காரணமாக அதிகளவு மழைநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் யாரும் சுரங்கப்பாதைகளின் வழியே செல்ல வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுரங்கப்பாதைகளில் மழைநீர்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் தற்போது வரை சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது மழைநீர் தேக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் மண்டலம் வார்டு 5-ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை, ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராயநகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் மழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு சீர்செய்யப்பட்டு வருகிறது. பருவ மழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

பொதுமக்கள் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819, 9445025820, 9445025821 ஆகிய வாட்ஸ்-அப் எண்களிலும் தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற புகார்கள் குறித்தும், தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ 12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ 12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
2. சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர் பொதுமக்கள் திடீர் முற்றுகை
ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்
3. காஷ்மீர் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு... வெளியான திடுக் தகவல்
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த சுரங்கத்தை தோண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
4. அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பொதுமக்கள்
அரசு பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கினர்.
5. விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.