மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு + "||" + Jewelry flush

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு
மானாமதுரையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
மானாமதுரை,

மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி தனபாக்கியம் (வயது 61). இவர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களில் ஒருவர் திடீரென்று தனபாக்கியம் அணிந்திருந்த 10½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அவருடன் வந்த வாலிபரும் தப்பி ஓடினார். திருடன், திருடன் என அவர் சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் இருவரும் மாயமாகி விட்டார்கள். இது குறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சிதம்பரத்தில் பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து 2 வாலிபர்கள் கைவரிசை
சிதம்பரத்தில் பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் நடித்து 9 பவுன் நகையை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர்.
2. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு
3. பெண்ணிடம் நகை பறிப்பு
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
4. பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
விருதுநகர் அருகே பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.
5. குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு...!
குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.