திருவாதவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 31 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறோம். இங்குள்ள எங்களது வீடுகள் 10 அடிக்கு 10 அடி கொண்ட 100 சதுர அடி அளவுள்ள வீடுகளாகும். அதில் ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர் வசித்து வருகிறோம். இந்த வீடுகளின் உயரமும் குறைவாக இருக்கிறது. அதேபோல் இடைவெளியின்றி வரிசையாக 30 வீடுகள் இருக்கின்றன. அதனால் நாங்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறோம். கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். காற்றோட்டம் இல்லை. கோடை காலத்தில் கடுமையான வெப்பம் இருக்கிறது. குறுகிய இடைவெளி காரணமாக தொற்று நோய் வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளது. கொரோனா தொற்றால் பலர் உயிரிழந்துள்ளனர். மழைகாலங்களில் சாக்கடை நீரும், மழை நீரும் வீட்டுக்குள் வந்து விடுகிறது. இந்த இன்னல்களை இருந்து எங்களை காக்க புதிய வீடுகள் கட்டி தர வேண்டும்.
பிரியாணி சாப்பிட்டதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.