மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை; பாலாற்றில் வெள்ளப்பெருக்கு + "||" + Heavy rains in Chengalpattu district; Flooding in the palar river

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை; பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை; பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளான ஆப்பூர், சிங்கபெருமாள்கோவில், வீராபுரம், செட்டிப்புண்டியம், திம்மாவரம், புலிப்பாக்கம், ஆத்தூர், அஞ்சூர், பாலூர், வில்லியம்பாக்கம், தென்மேல்பாக்கம், வல்லம், பொன்விளைந்தகளத்தூர், மனப்பாக்கம், வடகால், கொண்ட மங்களம், ஆலப்பாக்கம், மேலமையூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

ஏரிகள் நிரம்பின

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டைகளில் இளைஞர்கள் தூண்டில் போட்டும், வலைவீசியும் மீன்கள் பிடித்து வருகின்றனர்.

இந்த மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
2. தூத்துக்குடி: எட்டயபுரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை....!
எட்டயபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.