மாவட்ட செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது + "||" + Entrepreneurship Awareness Seminar on behalf of Dr Sivanthi Adithanar Engineering College

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை, தொழில் முனைவோர் விழிப்புணர்வு மையம் மற்றும் நெல்லை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இணையவழி தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தொடக்க உரையாற்றினார்.
நெல்லை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டு நிறுவன உதவி இயக்குனர் ஜி.ஜெரினா பப்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், புதிய தொழில்களை தொடங்குவதற்கான வழிமுறைகள், அரசின் நலத்திட்டங்கள், உலகளாவிய மின்னணு வணிகம் மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினார்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டு நிறுவனம் மூலம் புதிய தொழில் தொடங்கி பயன்பெற்ற அருள்செல்வி, நிர்மலா ஜான் ஆகியோர் சிறு தொழில் தொடங்கிய விதம், அதில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவற்றை கையாண்டது குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரியின் தொழில் முனைவோர் விழிப்புணர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேராசிரியை நளினி பேசினார். மாணவி ரிவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் அமிர்தகவுரி, ஒருங்கிணைப்பாளர்கள் நளினி, மெர்லின் சித்ரா தேவி மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.