மாவட்ட செய்திகள்

சாத்தான்குளத்தில் விபத்தில் காயம் அடைந்தவரை தோளில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்த வாலிபருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார் + "||" + Superintendent of Police Jayakumar praises youth who carried an accident victim in Satankulam on his shoulder and admitted him to hospital

சாத்தான்குளத்தில் விபத்தில் காயம் அடைந்தவரை தோளில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்த வாலிபருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்

சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் கடந்த 22-ந் தேதி 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். அதில் பலத்த காயம் அடைந்த ஒருவரை சாத்தான்குளத்தை சேர்ந்த சற்குணம் (வயது 30) என்பவர் தோளில் சுமந்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரோந்து பணியின்போது நேற்று சாத்தான்குளம் போலீஸ் நிலையம் வந்தார். அங்கு ்வாலிபர் சற்குணத்தை அழைத்து பாராட்டினார். அப்போது துணை சூப்பிரண்டு சம்பத், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் ஆகியோர் உடன் இருந்தனர்.