மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்புதிதாக 47 பேருக்கு கொரோனா + "||" + corona

நாமக்கல் மாவட்டத்தில்புதிதாக 47 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில்புதிதாக 47 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா
நாமக்கல், நவ.25 -
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
47 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை இம்மாவட்டத்தில் 53,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,172 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 219 ஆக அதிகரித்து உள்ளது.
410 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,304 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 505 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 410 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 658 பேருக்கு கொரோனா பெண் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 658 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
2. நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,741 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62,741 ஆக அதிகரித்து உள்ளது.
3. நாமக்கல் மாவட்டத்தில் 447 நகராட்சி, பேரூராட்சி, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
4. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
5. நாமக்கல் மாவட்டத்தில், முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடின; பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.