மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு + "||" + Gold chain flush with woman near Gummidipoondi

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த கண்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 35). அங்கன்வாடி சமையலர். இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தவாறு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பார்வதி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பெண்ணிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
சென்னை குரோம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரமேசின் மனைவி புவனேஸ்வரி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.